Monday 8 February 2016

பூண்டு குழம்பு
தேவையானவை: தோல் உரித்த பூண்டு – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டை போ ட்டு வதக்கவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பூண்டு வேகும் அளவு தண்ணீர் விடவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.  

வாழைப்பூ குழம்பு
தேவையானவை: வாழைப்பூ – 1 (ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பை நீக்கவும்), ஒன்றிரண்டாக தட்டிய சின்ன வெங்காயம், தேங்காய்ப் பால் – தலா ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ஆய்ந்த வாழைப்பூவை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, வெங்காயம், சீரகத்தைப் போட்டு… உப்பு, மஞ்சள்தூள், மிளகா ய்த்தூள், எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் வெந்த வாழைப்பூ, தேங்காய்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

No comments:

Post a Comment