Monday 8 February 2016

பூண்டு குழம்பு
தேவையானவை: தோல் உரித்த பூண்டு – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டை போ ட்டு வதக்கவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பூண்டு வேகும் அளவு தண்ணீர் விடவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.  

வாழைப்பூ குழம்பு
தேவையானவை: வாழைப்பூ – 1 (ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பை நீக்கவும்), ஒன்றிரண்டாக தட்டிய சின்ன வெங்காயம், தேங்காய்ப் பால் – தலா ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ஆய்ந்த வாழைப்பூவை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, வெங்காயம், சீரகத்தைப் போட்டு… உப்பு, மஞ்சள்தூள், மிளகா ய்த்தூள், எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் வெந்த வாழைப்பூ, தேங்காய்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
வெந்தயக்கீரை குழம்பு
  • தேவையானவை:   சின்ன வெங்காயம் – கால் கப், வெந்தயக்கீரை – ஒரு கட்டு (சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்), பூண்டு – 4 பல், தக்காளி – 2, புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், குழம்பு பொடி – ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண் ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு – தே வையான அளவு.

செய்முறை:    வெங்காயம், பூண்டு, தக்கா ளியைப் பொடியாக நறுக்க வும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளித்து… வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக் கவும். இதில், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியா த்தூள், குழம்பு பொடி, உப்பு, கீரை சேர்த்து வதக்கி, புளியைக் கரை த்து ஊற்றி, மூடி போட்டு சிறிது நேரம் வைத்திருந்து, பிறகு மூடி யைத் திறந்து, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வும்.

Friday 5 February 2016



வெஜிடபிள் சோமாஸ்(Vegetable Somaas)

தேவையானவை :

மைதா மாவு - இரண்டு கப்
உருளைக் கிழங்கு - 4
கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிபிளவர் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிதளவு
கறிமசாலா தூள் - 1 தேக்கரண்டி
ரொட்டித் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு, நெய் - தேவையான அளவு


செய்முறை :

1. உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிதளவு பட்டை, சோம்பு போட்டு வெடிக்க விட்டு அரைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

2. வதங்கியதும் பொடியாக நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கி மேற்கூறிய அளவு மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் போட்டு பிசைந்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விட வேண்டும்.

3. காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். நன்றாக கெட்டியாக வர, ரொட்டித்தூள் போட்டு கிளறிக் கொள்ளலாம். இதுவே வெஜிடபிள் பூரணம்.

4. மைதா மாவை சலித்து எடுத்து கொஞ்சம் `நெம்' அல்லது `டால்டா` சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்து இலேசாக வட்டமாக தேய்த்து வெஜிடபிள் பூரணத்தை நடுவில் வைத்து மடித்து ஓரங்களை சோமாஸ் கத்தியால் வெட்டவும். 

5. இதேபோல் நிறைய சோமாஸ்கள் தயார் செய்து வைத்துக்கொண்டு வாணலியில் எண்ணையைக் காய வைத்து செய்து வைத்துள்ள சோமாஸ்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.


தக்காளி சாதம்(Tomato rice)

தேவையானவை :

பாஸ்மதி அரிசி - 2 டம்ளர்
தக்காளி - கால் கிலோ
வெங்காயம் - 2
தேங்காய் - ஒரு மூடி
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
நெய் - அரை கப்
புதினா - கைப்பிடி அளவு
கொத்தமல்லி - கைப்பிடி அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை :

1. குக்கரில் நெய்யை ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வெடிக்க விடவும். இஞ்சி பூண்டு இரண்டையும் தட்டி வைத்துக் கொள்ளவும். நீளவாக்கில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
2. தக்காளியை நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும். புதினா, மல்லியை சுத்தம் செய்து கொள்ளவு வேண்டும். பட்டை கிராம்பு வெடித்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, மல்லி எல்லாவற்றையும் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. இத்துடன் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும். ஒரு மூடி தேங்காயை மிக்சியில் அடித்து கையால் நன்றாகப் பிழிந்து 2, 3 தடவை பால் எடுக்கவும். பாலுடன் தண்ணீர் சேர்த்து 4 கப் அளந்து குக்கரில் விட்டு தாளித்த சாமான்களுடன் அரிசியையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
4. குக்கரை மூடி ஆவி வந்ததும் வெயிட் போட்டு 2 சத்தம் வந்ததும் எடுத்து விடவும். சூடான தக்காளி சாதம் ரெடி. இறக்கி வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்தே குக்கரை திறக்கவும். வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறுவது சிறந்தது.



தேங்காய் பால் பட்டாணி பிரியாணி

தேவையானவை :

1. பாசுமதி அரிசி - 1 கப் 

2. பட்டாணி - 1/2 கப் 

3. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

4. கெட்டியான தேங்காய் பால் - 1 கப் 

5. தண்ணீர் - 1/2 கப் 


6. உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு :

1. புதினா - 1/2 கப் 

2. கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
 
3. பச்சை மிளகாய் - 3 

4. வரமிளகாய் - 2 

5. துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் 

6. இஞ்சி - 1/2 இன்ச் 

7. பூண்டு - 4 பற்கள்


தாளிப்பதற்கு :

1. நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

2. எண்ணெய் - 1 டீஸ்பூன் 

3. பிரியாணி இலை - 1 

4. பட்டை - 1/4 இன்ச் 

5. கிராம்பு - 2 

6. ஏலக்காய் - 1
செய்முறை:


1. மிக்ஸியில் முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 
2. பாசுமதி அரிசியை நீரில் சுமார் கால் மணிநேரம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும். 

3. பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்தால், தேங்காய் பால் பட்டாணி பிரியாணி ரெடி!!!




Tuesday 4 August 2015

செட்டிநாடு புளிக்குழம்பின் செய்முறை தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் - 1/2 கப் (தோலுரித்தது) பூண்டு - 10 பல் (தோலுரித்தது) தக்காளி - 2 (நறுக்கியது) புளி - 1 எலுமிச்சை அளவு சாம்பார் பொடி - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் வடகம் - சிறிது சோம்பு - 1/4 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு புளிக்குழம்பு ரெடி!!

Thursday 4 December 2014


வாழைக்காய் - ஒன்று (நீளமாக நறுக்கவும்)Onions, tomatoes, cut it and put powder. Other items (mustard, cumin, curry leaves) are willing to take.
வெங்காயம் - ஒன்றுதக்காளி - ஒன்றுகொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதுகடுகு, சீரகம், எண்ணெய் - தாளிக்க

வாழை மசாலா


அரைக்க:

பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டுசிறிய வெங்காயம் - 5
பூண்டு - 5 பல்
தேங்காய் - சிறிது
மிளகு, சீரகம், சோம்பு - தலா ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5


எப்படிச் செய்வது? 


வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற  பொருட்களை(கடுகு, சீரகம், கறிவேப்பிலை) தயாராக எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காய் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு நீர் தெளித்து அரைக்கவும். பின்பு அதே வாணலியில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், சேர்த்து வதக்கவும் பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். 

அதில் வதக்கி ஆற வைத்த வாழைக்காய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். அரைத்த மசாலா சேர்த்து நீர் தெளித்து வேக விடவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான செட்டிநாட்டு வாழை மசாலா தயார். -