Wednesday 4 September 2013

பூர்ணக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
 அரிசி மாவு - 1/4 கிலோ
வெல்லம் (உருண்டை வெள்ளம்) - 1/2 கப்
அவல் - 1 கைப்பிடி
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 சிட்டிகை

செய்முறை:
மேல் மாவு செய்ய:
பச்சரிசியை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி வடிகட்டி விடவும். பிறகு இதை ஒரு துணியில் உலர்த்தி நிழலில் காய வைக்க வேண்டும். அரிசி காய்ந்தவுடன் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

பிறகு அரைத்த மாவை வெறும் வாணலியில் ஓரளவிற்கு வறுத்துக் கொண்டு சல்லடையில் சலித்துக் கொள்ளவும். அல்லது அரைத்த மாவை ஆவியில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். இவ்வாறு சலிக்காவிட்டால் மாவு சிறு சிறு கட்டியாகி விடும்.

 அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எண்ணெய் சேர்த்து, அதனுடன் மிதமான சுடு தண்ணீரை தேவையான அளவு சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.வாணலியில் தேங்காய் துருவலைக் கொட்டி நன்றாக வறுத்துக் கொள்ளவும். அவலை தண்ணீரில் கொட்டி சிறிது நேரம் கழித்து தண்ணீரை பிழிது எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


பிறகு வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்து பாகாக உருகியவுடன், வறுத்த தேங்காய் துருவலையும், பிழிந்து வைத்த அவலையும், ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பாகு கொஞ்சம் கெட்டியாக வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

கொழுக்கட்டை செய்ய:

ஒரு வாழை இலை (அல்லது) பாலிதீன் பேப்பர் எடுத்து அதன் மீது 
சிறிது எண்ணெய் தடவி (அரிசி மாவைத் தட்டினால் மாவு ஒட்டாமல் எடுக்க வரும்) ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு அரிசி மாவை எடுத்து மெல்லியதாக வட்டமாக தட்டிக் கொள்ளவும்.

தட்டிய மாவில் செய்து வைத்த தேங்காய் உள்ளடத்தை (பூர்ணத்தை) ஒரு தேக்கரண்டி வைத்து இரண்டாக மடித்து, உள்ளடம் வெளியில் வராதவாறு ஓரத்தில் நன்றாக அழுத்தி விடவும்.

இவ்வாறு தயாரித்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் ஆவியில் வேக வைத்து, சிறிது நேரம் சுமார் ஐந்து நிமிடம் கழித்து எடுத்து சூடாகப் பரிமாறலாம்.

கவனிக்க வேண்டியவை:

அரிசி மாவை இரண்டாக மடிக்கும் போது வாழை இலை அல்லது பாலிதீன் பேப்பரோடு சேர்த்து மடித்தால் சுலபமாக வரும். அரிசி மாவை மிகவும் மெல்லியதாக தட்டினால் ஓட்டையாகி விடும்.

Monday 12 August 2013

Tiruchirappalli

Montage image showing Rockfort, a temple tower with pyramidal structure and its wooden chariot in the foreground, a dam showing the bridge and another temple tower with pyramidal structure
Clock-wise from top: Rockfort, Jambukeswarar Temple, Thiruvanaikaval, Upper Anaicut, Sri Ranganathaswamy Temple, Srirangam
Tiruchirappalli is located in Tamil Nadu
Tiruchirappalli
Coordinates: 10°48′18″N 78°41′08″E / 10.80500°N 78.68556°E / 10.80500; 78.68556Coordinates: 10°48′18″N 78°41′08″E / 10.80500°N 78.68556°E / 10.80500; 78.68556
Country India
State Tamil Nadu
Region Chola Nadu
District Tiruchirappalli
Government
 • Mayor A. Jaya
Area
 • City 146.70 km2 (56.64 sq mi)
Elevation 88 m (289 ft)
Population [1]
 • City 752,066
 • Rank 47th
 • Density 5,100/km2 (13,000/sq mi)
 • Metro[2] 866,354
Languages
 • Official Tamil
Time zone IST (UTC+5:30)
PIN 620 xxx
Telephone code 0431
Vehicle registration TN-45,TN-48,TN-81
Website [2]

Tuesday 18 June 2013


  • சமையல்:கார தோசை

    • Spicy Dosa - Cooking Recipes in Tamil
    • தோசைன்னாலே நமக்கெல்லாம் ஒரே குஷிதான்.. அதிலும் கார தோசைன்னா கேட்கவே வேணாம்.. சரி, இப்போ காரதோசை செய்றது எப்புடினு பார்க்கலாமா....
    • தேவையான பொருட்கள்:
    • அ ரிசி - 1/2 கப் 
    • துவரம்பருப்பு - 1/4 கப்
    • தேங்காய் - 1/2 முடி
    • மிளகாய் - 4 
    • சீரகம் - 1/2  டீஸ்பூன்
    • மிளகு - 10
    • உப்பு - 1/2 டீஸ்பூன்
    • பெருங்காயம் - சிறு துண்டு
    • மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது
    • செய்முறை:
    • * அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
    • * எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும்.
    • * தேவையெனில் சிறிது தண்­ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
    • * தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
    • * மாவு மீந்து விட்டால், அடுத்த முறை தோசை ஊற்றும்போது மீந்த மீந்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை வார்க்கவும்.


    Monday 17 June 2013

    வாழைப்பூ துவையல் 


    வாழைப்பூ ஆய்ந்து வேகவைத்துக் கொள்ளவும்.
    வாணலில் எண்ணெய் ஊற்றி
    உளுத்தம் பருப்பு -1டீஸ்பூன்
    கடலைப்பருப்பு-1டீஸ்பூன்
    வரமிளகாய்-4
    மிளகு சீரகம்-1/2 டீஸ்பூன்
    பெருங்காயம்-1சிட்டிகை
    இவற்றை வறுத்து வேகவைத்த வாழைப்பூவுடன் புளி உப்பு சேர்த்து அரைக்கவும்.

    Thursday 13 June 2013

    இட்லி மாவு தயார் செய்யும் முறை:
    தேவையான பொருட்கள்:
    புழுங்கல் அரிசி - 4 பங்கு
    உளுத்தம் பருப்பு (உளுந்தரிசி) -  1 பங்கு
    உப்பு - ருசிகேற்றவாறு

    அரிசியை 6  மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பை 2  மணி நேரம் ஊற வைக்கவும்.

    முதலில் உளுத்தம் பருப்பை அறைக்கவும். பிறகு ஊற வைத்த அரிசியை அரைக்கவும்.

    அரைத்த மாவுகளை ஒன்றாக சேர்த்து உப்புடன் கலக்கவும்.

    மிளகு பொங்கல்

    தேவையான பொருட்கள்:

    • 1. பச்சரிசி - 1 கப்
    • 2. சிறு பருப்பு - 1/4 கப்
    • 3. மிளகு - 1 தேக்கரணடி
    • 4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
    • 5. எண்ணெய், நெய் - 2 மேஜைக்கரண்டி
    • 6. பெருங்காயம் - 2 சிட்டிகை
    • 7. உப்பு - ருசிக்கு
    • 8. தண்ணீர் - 4 - 4 1/2 கப்
    • 9. முந்திரி - 5 (விரும்பினால்)

    செய்முறை:

    • அரிசி, பருப்பை ஒன்றாக கலந்து கழுவி வைக்கவும்.
    • கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் மிளகு, சீரகம் தாளிக்கவும்.
    • இதில் பெருங்காயம் சேர்த்து உடனே அரிசி பருப்பு கலவையில் சேர்க்கவும்.
    • இத்துடன் உப்பு, நெய்யில் வறுத்த முந்திரி, தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரில் 1 விசில் விட்டு 15 நிமிடம் சிறுந்தீயில் வைத்து எடுக்கவும். அல்லது வழக்கம் போல் 5 விசில் வைத்தும் எடுக்கலாம்.
    • எடுத்ததும் நன்றாக ஒரு முறை கலந்து  விட வு ம் .

    SRI AGATHIYAR SANMAARGA SANGAM ONGARAKUDIL, THURAIYUR

    GurunatharT
    he Sri Agathiar Sanmaarga Charitable Trust has been serving the poor and downtrodden in Thuraiyur, Trichy, Tamilnadu, India since 1989. The center, known as ''Omkarakudil", has charity as its basis of spirituality.
           Charity here means anything that can be done to ease the suffering of poor people without expecting anything in return. These include providing food, water, clothing, medical assistance and education. The focus on charity here is mainly feeding the hungry poor people. Most of them are poor homeless, old aged and children from poor families. For the past two years the organization has also started a center at the foot of the Perumal Hill to cater for the poor in that area.
    Sangam Building       In addition to that about 20,000 people are fed around the Thuraiyur town. Following this example volunteers have setup food distribution center in Chennai, Salem, Rasipuram, Kanjamalai Kovil, Trichy, Mangathevan Patti, Tanjavur, and Paingganadu.
           Apart from food, the organization is also supplying clean drinking water to Thuraiyur town and it's surrounding villages. During the summer season (from March till May) 'neer moor' or weak butter milk is also supplied to the people of Thuraiyur.

           Mjp jiytDk; Qhdgz;bjDkhfpa kfhd; Rg;ukzpahpd; ngUikia NgRtNj jpUg;Gfo; MFk;. gpwtpg;gpzpf;F kUe;jhd kfhd; Rg;ukzpahpd; jpUtb Gfio NgRtjhy; mjw;F jpUg;Gfo; vdg; ngau; ngw;Ws;sJ. ,e;E}iyf; fw;gNj fy;tpahFk;.

    Monday 18 February 2013


    பூந்தி லட்டு
    தேவையானவை: கடலை மாவு – 2 கப், வனஸ்பதி – 2 டீஸ்பூன், சர்க்கரை – 3 கப், தண்ணீர் – ஒன்றரை கப், பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, ஃபுட் கலர் – சிறிதளவு, எண்ணெய் – பொரிக்க த் தேவையான அளவு.
    செய்முறை: சர்க்கரையுடன் தண் ணீரை சேர்த்து பாகு காய்ச்சவும். கடலை மாவு, வனஸ்பதியை சேர் த்துப் பிசைந்து, ஃபுட் கலர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்து க் கொள்ளவும். பின் ஒரு பூந்தி கரண்டியில் கொட்டி, நேராக சூடான எண்ணெயின் மேல் கரண்டியை வைத்து, மற்றொரு கரண்டியால் பலமாக தட்டினால் முத்து முத்தாக விழும். இதை பொன்னிற மாகப் பொரித்து, உடனேயே சர்க்கரைப் பாகில் போட்டு… பாகிலிருந்து பூந் திகளை எடுத்து ஒரு தட் டில் கொட்டி, பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ ஆகியவற்றைக் கலந்து லட்டு பிடிக்கவும்.

    Friday 15 February 2013


    சமையல் குறிப்புகள் 






    1.  பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம். 

    2.பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும். 

    3.தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

    4.எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

    Wednesday 13 February 2013


    பால் கொழுக்கட்டை சமையல் குறிப்பு :

    தேவையான பொருட்கள்:
    பச்சரிசி-250 கிராம்; வெல்லம்-250 கிராம்; பால் 250 கிராம்; துருவிய தேங்காய்-1கப்; ஏலக்காய்-5; முந்திரிப் பருப்பு-10.
    செய்முறை:
    பச்சரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸியில் வெகு நைஸாக அரைத்து எடுக்கவும். மாவு பட்டுப் போல் நைஸாக இருக்கவேண்டும். மாவை சின்னச் சின்ன பால்களாக உருட்டவும்.  உருண்டையாகவோ  அல்லது ஒவல் வடிவத்திலோ இருக்கலாம்.  உருண்டைகள்  கொண்டக்கடலை அளவில் இருக்கவேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதிநீரில், அரிசி மாவு  உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக  சேர்க்கவும்.  உருண்டைகள் வெந்ததும்,   தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது நேரம் வற்ற விடவும். பிறகு அந்தக் கலவையில்  வெல்லக் கட்டிகளை தட்ட்ப்போட்டு கொதிக்க விடவும். வெல்லம் நன்கு கரைந்து சீரானதும் அதில்  பால் சேர்த்து  5 நிமிடம் கொதிக்கவிட்டபின், அந்தக் கரைசலில் தேங்காய்த் துருவலையும் முந்திரிப் பருப்பையும் சேர்க்கவும். இந்த இனிப்பு பண்டம் தளதளவென்று இருக்கும் . இறக்கியபின் அதில் ஏலக்காய் சேர்த்தால், மணமான சுவையான இனிப்புப் பண்டம் தயார்.

    Tuesday 12 February 2013


    அதிரசம்
    தேவையானவை: ஈர பச்சரிசி மாவு – 4 கப் (பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, துணியில் போட்டு, நிழலில் உலர வைத்து, மெஷினில் கொடுத்து அரைக்கவும்), துருவிய வெல்லம் – 4 கப், ஏல க் காய்த்தூள் – சிறிதளவு.
    செய்முறை: வெல்லத்துடன் 4 கப் தண்ணீர் சேர்த்து க் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும். பிறகு, கீழே இறக்கி, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கிள றவும் (அடுப்பில் வைத்துக் கிளறக் கூடாது). இதனு டன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை 2 நாட்கள் அப்படியே வைக்கவும். பிறகு, வாழை இலையில் வட்டமாக தட்டி, எண்ணெயில் அதிரசமாக பொரித்து எடுக்கவும். இந்த அதிரச ம் ஒரு மாதம் வரை கெடாது.

    குலாப் ஜாமூன்
    தேவையானவை : சர்க்கரை சேர்க்காத கோவா – 300 கிராம், மைதா – 100 கிராம், பால் – சிறிதளவு (அழுக்கு நீக்க), சர்க்கரை – அரை கிலோ, தண்ணீர் – 300 மில்லி (ஒரு பெரிய டம்ளர்), எண்ணெய் – தேவையான அளவு.
    செய்முறை: கோவாயையும், மைதா வையும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வும். சர்க்கரையையும், தண்ணீரையு ம் சேர்த்துக் கலந்து கொதிக்க விடவு ம். பிசுக்கு பதம் வந்ததும், சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி, வடிகட்டி தனி யே வைத்துக் கொள்ளவும். கோவா – மைதா கலவையைப் சிறு சிறு உரு ண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துக் கொள்ளவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). பின் சர்க்கரை பாகில் போட்டு, சில மணி நேரம் ஊறிய பின் பரிமாறவும்.









    Monday 11 February 2013

    AUDIO


    சமையல் குறிப்புகள்


    இனிப்பு போளி



    இனிப்பு போளி 
    தேவையான பொருட்கள்
    1. கடலை பருப்பு – 1 கப்
    2. வெல்லம் – 1 கப்
    3. துருவிய தேங்காய் – 3/4 கப்
    4. ஏலக்காய் தூள் – சிறிதளவு
    5. மைதா -1 கப்
    6. மஞ்சள் தூள் அல்லது கேசரி பவுடர் – 1 சிட்டிகை
    7. நெய் – தேவையான அளவு
    8. சிறிதளவு உப்பு
    பூரணம் செய்யும் முறை:
    1. கடலை பருப்புடன் தண்ணீர் சேர்த்து குழைந்து போகாமல் வேக வைக்கவும்
    2. பிறகு தண்ணீரை வடித்து சிறிது நேரம் உலர வைத்து பிறகு மிக்ஸ்யில் கடலை பருப்பு, வெள்ளம், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் கெட்டியாக சேர்த்து அரைக்க வேண்டும்
    3. பிறகு வாணலியில் விட்டு கெட்டியாக வரும் வரை கிளறி உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
    போளி  செய்யும் முறை:
    1. மைதா மாவில் சிறிது கேசரி பவுடர் அல்லது மஞ்சள் தூள் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
    2. ஒரு பிளாஸ்டிக் தாளில் சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும்
    3. அதன் மேல் கடலை பருப்பு உருண்டையை வைத்து மூடவும்.
    4. பிறகு அதை ரொட்டி போல தட்டவும். நல்லெண்ணெய் உபயோகிப்பது சுவையை கூட்டும்.
    5. தட்டிய ரொட்டிகளை தோசை கல்லில் வைத்து சிறிது நெய் ஊற்றி சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும்
    6. சுவையான போளி  தயார்

    Friday 8 February 2013

    சமையல்  குறிப்புகள்

    பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

         வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

         சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

         சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

         தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

         உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

         கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

         ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

         தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

         பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

         இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

         தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

         மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

         பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

         வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

         தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

         எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

         உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

         தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

         துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

         நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்.

         கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்துச் சமைக்க வேண்டும்.

         குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.

    Tamil Selvi Thuraiyur

    துறையூர்  பெருமாள் மலை