Wednesday 10 September 2014



ரவா கேசரி                                                                                               

தேவையான பொருட்கள்:

 

  1. ரவை - 1 கப்
  2. சக்கரை - 2 கப்
  3. தண்ணீர் - 1 1/2 கப்
  4. பால் - 1 கப்
  5. கேசரி கலர் - 1 சிட்டிகை
  6. ஏலக்காய் பவுடர் - 2 சிட்டிகை
  7. நெய் - 4 மேஜை கரண்டி
  8. முந்திரி - 15
  9. உப்பு -  1 சிட்டிகை
செய்முறை:
  • முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
  • கடாயில் முன்று  மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை  சிறு தியில்  வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்
  • பால் மற்றும் தண்ணீரை கலர் உடன்   சேர்த்து கொதிக்கவைக்கவும்
  • தண்ணீர் நன்றாக கொதிவரும்போது, ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்
  • ரவை வெந்தவுடன் சக்கரை மற்றும் உப்பு சேர்க்கவும் 
  • பின் ஏலக்காய், வருத்த  முந்திரி சேர்த்து நன்றாக கிளறவும்
  • இப்பொழுது சுவையான  கேசரி ரெடி


மைதா கேக்

தேவை

மைதா மாவு – 1/2 கிலோவெண்ணெய் – 50 கிராம்சர்க்கரை – 350 கிராம்சமையல் சோடா உப்பு – 2 சிட்டிகைதண்ணீர் – தேவையான அளவு  

எப்படிச் செய்வது 

சர்க்கரையை மிக்ஸியில் போட்டு  நன்கு பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.  அதனுடன் மைதா மாவு, ஏலக்காய் பொடி, சமையல் சோடா உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும். அந்த கலவையில் தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு  பிசைவது போல் கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும். பின்னர் மாவை சற்று தின்னமாக தேய்த்து தேவையான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.  அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், வெட்டிய மைதா மாவு துண்டுகளைப் போட்டு, பொன் நிறமாக  பொரித்து எடுக்கவும்.

மைசூர் பாகு செய்யும் முறை 

294639_259741067389207_2540071_n

தேவையானவை:

கடலை மாவு – 250 கிராம்
சோடா உப்பு – 1 சிட்டிகை
சீனி – 3/4 கிலோ
டால்டா அல்லது நெய் – 3/4 கிலோ

செய்முறை:

கனத்த பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் கடலை மாவை ஒரு கையால் தூவிக் கொண்டே கட்டி சேராமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் நெய்யை இளக வைத்து இடையிடையே கலவையில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். நெய் கக்கி பொங்கி வரும் போது சிறிது சோடா உப்பு போட்டு கிளறி நெய் தடவிய தாம்பளத்தில் கொட்டி கரண்டியால் தேய்த்து விட்டால் மைசூர் பாகு ரெடியாகி விடும். ஆறுவதற்கு முன் வில்லைகள் போடவும்.

Thursday 4 September 2014

பால் பணியாரம் சமையல் குறிப்பு

பால் பணியாரம்தேவையான பொருட்கள்
பச்சரிசி – 100 கிராம்
உளுந்து – 75 கிராம்
பசும்பால் – 200 கிராம்
தேங்காய் பால் – ஒரு டம்ளர்
சர்க்கரை – 100 கிராம்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
பொரிக்க (எண்ணெய்) – தேவையான அளவு
 
செய்முறை
பச்சரிசியையும், உளுந்தையும் ஐந்து மணிநேரம் ஊற வைத்து கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை மாதிரி அரைக்கவும். இந்த மாவை சுண்டைக்காய் சைஸாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். வெள்ளை நிறமாக பொறித்து எடுக்கவும். பொறித்து எடுத்த உருண்டைகளைக் கொதிக்கிற வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும் சுவையான பால் பணியாரம் ரெடி….

பால் செய்முறை
பசும் பாலைக் காய்ச்சி, இறக்குகிற சமயம் கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். அதில் சர்க்கரை, ஏலப்பொடி சேர்க்கவும்.

Monday 1 September 2014


சமையலில் 

செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை

சமையலில்  செய்யக்கூடாதவை...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.


* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.(வெங்காயத்தை முதலில் வதக்கி பிறகு அதன் கூட தக்காளியை சேர்த்து வதக்கவும்.இல்லையேல் வெங்காயம் சரியாக வதங்காது...)


* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. 


செய்ய வேண்டியவை....  
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.


*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.